நாட்டின் தேசிய வளங்கள் விற்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கை குறித்து கலந்துரையாட விசேட குழு

அரசாங்கத்தினால், நாட்டின் தேசிய வளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் சம்பவங்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேசிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக எரிபொருள், துறைமுகம் மற்றும் மின்சார ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தொழிற்சங்க பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த குழுவானது, கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரச வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக செயற்படும் சகல அமைப்புக்களும் வாராந்தம் ஒன்று கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.