உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபருக்கு சொந்தமான வேன் ஒன்று கண்டுபிடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரொருவர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சிற்றூந்து மற்றும் அதன் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளுக்கு அமைவாக காத்தான்குடி காவல்துறையினரால் நேற்றைய தினம் குறித்த சிற்றூந்து கண்டுபிடிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது மொனராகலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹனீபா மொஹமட் என்பவருக்கு சொந்தமான சிற்றூந்து ஒன்றே இவ்வாறு காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சாரதி அவரின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.