மின் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியது

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று  காலை மின்விநியோகத்தடை ஏற்பட்டது.

குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் வழங்குவதில் தடையேற்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.