பூண்டுலோயாவில் நீராடச் சென்று காணாமல்போன நபரைத் தேடும் பணிகள் 3 ஆவது நாளாகவும் தொடர்கிறது

பூண்டுலோயா – வெவஹேன பிரதேசத்தில் உள்ள கொத்மலை ஓயாவில் நீராடச்சென்ற நிலையில் காணாமல்போன நபரைத் தேடும் பணிகள் இன்று   மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த நபர், கடந்த 2 ஆம் திகதி தனது நண்பர்கள் ஐந்து பேருடன் நீராடச் சென்றபோது காணாமல்போயுள்ளார்.

அவரைத் தேடும் பணிகளைப் பூண்டுலோயா காவல்துறையினர், இராணுவம், கடற்படை ஆகியோருடன் பிரதேசவாசிகளும் இணைந்து மூன்றாவது நாளாகவும் முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.