மனைவி பலி – கணவன் கைது! – நடந்தது என்ன?

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூர் பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவனை கைது செய்யதுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி மகளூர் பல நோக்கு கூட்டுறவு சங்க வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய ராஜேந்திரன் ரஜேந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தொழிலுக்காக வௌிநாடு சென்றிருந்த நிலையில் கடந்த 18 நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வௌிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் தொடர்பில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினமான நேற்றிரவு இரவருக்குமிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ள நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பிரிவு பொலிசார் அழைக்கப்பட்டு விரிவான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.