ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுகின்றது. இதனால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

ஆறுகளை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.