மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

நாட்டுக்கு மேலும் 400,000 பைஸர் தடுப்பூசிகள் நேற்று  கொண்டு வரப்பட்டதாகக் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வாரத்தில் 8 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி தொகை நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இதுவரையில் 2.4 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.