வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய மாகாணங்களின் சில பகுதிகளில், 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும்.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில், ஓரளவு பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில், மணிக்கு 40 கிலோமீற்றர் வரையில் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.