ஊவா மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பாக ஆளுநரின் அறிவிப்பு

ஊவா மாகாணத்தில் உள்ள 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீளத் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் எம். ஜே.எம். முஸம்மில்  தெரிவித்துள்ளார்.

இவற்றில் முதல் கட்டமாக, தரம் ஒன்று முதல் தரம் 5 வரையுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் உள்ள 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகத் தென் மாகாண கல்வியமைச்சு நேற்று அறிவித்திருந்தது.