ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீளத் திறப்பு

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை, தொடர்ந்தும் இடம்பெறமாட்டாது என அறிக்கை ஒன்றின் மூலம் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்பத்திரங்கள், பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.