வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றம்

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை, பேலியகொடை விசேட குற்ற விசாரணை பிரிவில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் அதில் ஒருவரான லங்கா சதொச நிறுவனத்தின் நிதி பிரிவு பொது முகாமையாளர் சுசிரி பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.