60 வயதுக்கு மேற்பட்டோர் தொழிலுக்காக லெபனானுக்கு பிரவேசிக்க அனுமதி

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்காக மீண்டும் லெபனனுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது லெபனானில் கொவிட் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு மீள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீவிர கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அமுலாகும் வகையில், தொழில் வாய்ப்புக்காக 60 வயதுக்கு மேற்பட்டோரை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதனை லெபனான் அரசாங்கம்  தற்காலிகமாக இடைநிறுத்தியது.

எனினும், குறித்த நபர்கள் லெபனானுக்குள் பிரவேசிக்கும்போது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு தடுப்பூசியை பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.