வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிசிஆர் மையம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று  இந்த மையத்தை ஆய்வு செய்தார்.

இந்த மையத்தின் மூலம், கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமது பரிசோதனை முடிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் பெற முடியும்.

இந்த மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 500 PCR சோதனைகளைச் செய்ய முடியும்.

இந்த மையம் ஒரு நாளைக்கு 7,000 பிசிஆர் சோதனைகளைச் செய்யும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.