பொது சுகாதார பரிசோதகர்களை தாக்க முயன்ற நபர் கைது!

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியதற்காக  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இருவரை தகாத வார்த்தைகளால் தூற்றி, அவர்களை தாக்க முயன்ற சந்தேக நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காலி, நெலுவ பிரதேசத்தில் மரண வீடொன்றில் கலந்துக்கொண்ட ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். இதனால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த நபரை எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களை சந்தேகநபர் தகாத வார்த்தைகளால் தூற்றி, பொல்லினால் தாக்க முயன்றுள்ளார்.

எனினும், அங்கிருந்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.