மத்திய வங்கி ஆளுநர் பதவியிருந்து பேராசிரியர் லக்ஷ்மன் விலகினார்:

கடந்த 2019 டிசம்பர் முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துவந்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன், இன்று முதல் தமது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததாக பேராசிரியர் லக்ஷ்மன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

இன்று தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறவுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாளைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்திருந்தது.