தம்புள்ளை மொத்த விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன

தம்புள்ளை நகரின் சகல மொத்த விற்பனை நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.

பிரதேச கொவிட்19 செயலணி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தம்புள்ளை நகர சபைத் தலைவர் ஜாலிய ஒபாத தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் காலை 9மணி முதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதியில் மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.