இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 வது அமர்வில் இலங்கை சார்பாக ஜி.எல்.பீரிஸ் உரையாற்றுவார்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இன்று  உரையாற்றவுள்ளார்.

இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையை சமர்ப்பித்து நேற்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மனித உரிமைகள் ஆணையாளர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் ஆணையாளர் நேற்று அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்துதல் மற்றும் சிவில் ஆர்வலர்கள் அடக்குமுறை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த அறிக்கை இன்று விவாதிக்கப்படவுள்ளதோடு உறுப்பு நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல கட்சிகள் இன்று இலங்கை குறித்து கருத்து தெரிவிக்கவுள்ளன.