முன்னாள் பிரதமர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்த விடயம்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது காவற்துறை தலைமையகத்தில் புதிய அலுவலகம் ஒன்றை அமைப்பதற்காக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பானது சட்டப்பூர்வமற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.