அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமனம்

எதிர்வரும் 15 ம்திகதி முதல் அமுலாகும் வகையில் அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம்  15 ம்திகதி அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர், இதற்கு முன்னதாக அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன் சுமார் 9 வருடங்கள் மத்திய வங்கியின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது, மத்திய வங்கியின் ஆளுநராகவுள்ள பேராசிரியர் W.D. லக்ஷ்மன் நாளையுடன் பதவி விலகவுள்ள நிலையில், நாளை மறுதினம் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்படவுள்ளார்.