விரைவில் முடிவுக்கு வரும் ஊரடங்கு!

கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் முடிவுறுத்த அரசு ஆராய்ந்து வருகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குடன் கூடிய முடக்க நிலைமையால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்விச் செயற்பாடுகள் உட்பட்ட முக்கியமான சேவைகள் பெரிதும் பின்னடைவை சந்தித்திருப்பதால் அரசு இவ்வாறு ஆராய்ந்து வருகிறது

அமுலிலுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி அத்தியாவசிய சேவைகள் உட்பட்ட முக்கியமான சேவைகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதியளிப்பது குறித்தும் ,அதன் பின்னர் விரைவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தொடர் ஊரடங்கு அமுலாக்கம் மரண வீதத்தை குறைத்து கொரோனா நோயாளர் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் நாட்டை தொடர்ந்தும் முடக்காதிருக்க அரசு முடிவு செய்துள்ளது.