தென்மாகாணத்தில் நில அதிர்வு

லுணுகம்வெஹெர பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 10.38 மணியளவில் இடம்பெற்ற குறித்த நில அதிர்வு ரிச்டர் அளவில் 2.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

கடந்த வாரம் தென்னிலங்கையின் பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.