மனைவி உயிரிழந்து மூன்று நாட்களில் கணவனும் கொரோனவுக்கு பலி!

கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது.

சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3 ஆம் திகதி கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.