ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  முன்னிலையாகி சாட்சியம் வழங்கி வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இவர் சுமார் மூன்று மணிநேரம் அளவில் இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியம் வழங்குவதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்ததது.

இதன்படி, அவர், இன்று காலை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னதாக மூன்று தடவைகள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே சாட்சியம் வழங்கிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.