தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின், தானியங்கி தரவுத்தளம் காணாமல்போனமை குறித்து, அந்தத் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒளடதங்கள் தொடர்பான பிரதிநிதி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின்கீழ் இருந்த குறித்த தரவுத்தளம், சில நாட்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபைத் தலைவரான வைத்தியர் ரசித்த விஜேவன்தவின் ஆலோசனையின்பேரில், குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.