நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 400,000ஐ அண்மித்தது!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 3,315 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 397,670 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,386 பேர் இன்று குணமடைந்தனர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 346,767 ஆக அதிகரித்துள்ளது.