இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா!

இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புரவின் மகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.