மூடப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

பொகவந்தலாவ மோரா தோட்டப் பகுதியில் இயங்கி வந்த கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் மூட்டப்பட்டுள்ளது.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள் நேற்று முன்தினம் இரவு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் ‌.

மோரா தோட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் ஒரே தடவையில் 148 நோயாளர்கள் அனுமதிக்க கூடிய வகையில் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.