கொள்ளுப்பிட்டி கடற்கரையில் மஸ்கெலியா நபர் சடலமாக மீட்பு

கொள்ளுப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அப்பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்துவந்த, மஸ்கெலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.