நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – வடிவேல் சுரேஷ்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண கொடுப்பனவு மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், அரசாங்கத்தினால் 2,000 ரூபா நிவாரணக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு தகுதியான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பெயர் பட்டியலில் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.