அரச ஒசுசல மருந்தகங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் திறக்கப்பட வேண்டும்

அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தில் அரச ஒசுசல மருந்தகங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் திறக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பல தடவைகள் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.