நேற்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 175,431 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 24,724 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 52,472 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், 8,089 பேர் அஸ்ட்ராசெசெகா முதலாம் தடுப்பூசியினை பெற்றுள்ளதுடன், 3,654 பேர் இரண்டாம் தடுப்பூசியினை  பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொடர்னா தடுப்பூசி 15 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதோடு, 81,237 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 426 பேர் பைஸர் தடுப்பூசியை இரண்டாவது தடவையாக நேற்று பெற்றுள்ளனர்.

இதன்படி, நாட்டில் 96 லட்சத்து 9 ஆயிரத்து 702 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், 44 இலட்சத்து 66 ஆயிரத்து 999 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.