26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு வீடுகளிலிருந்து சிகிச்சை வழங்கும் கொவிட் ஒன்றிணைந்த மனைசார் சேவையின் கீழ் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

1390 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பதிவு செய்து நோயாளிகள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்

மேலும் 2222 கொவிட் நோயாளர்கள் குணமடைந்து ​நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதன்படி, நாட்டில் குணமடைந்த மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 44 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டு மக்களில் ஒரு கோடி 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். ஐம்பத்தி ஆறு லட்சத்து 64 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்