வீட்டில் மதுபான விற்பனை – அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

மட்டக்களப்பு திமிலைதீவில் ஊரடங்கு வேளையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை நேற்று  மாலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மட்டு தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன் ரி. கிருபாகரன் தலைமையிலான பொலிசார் சம்பவ தினமான நேற்று மாலை குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

வீட்டின் வெளியே உள்ள மலசல கூடத்தில் அட்டை பெட்டிகளில் மதுபானப் போத்தல்களை மறைத்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 275 கால் போத்தல் கொண்ட மதுபான போத்தல்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட அரச மதுபானங்களை மதுவரி திணைக்களத்திடம் ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.