தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்  இதுவரை  56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில் 757 வாகனங்களும், 1,509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.