40 மெட்ரிக் தொன் ஒட்சிசனுடன் வந்தது ‘சக்தி’

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒட்சிசனை ஏற்றிவருவதற்காக இந்தியா சென்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி என்ற கப்பல் இன்று   காலை கொழும்பு துறை முகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட 40 மெட்ரிக் தொன் ஒட்சிசன் தொகையுடன் குறித்த கப்பல் கடந்த தினம் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

100 தொன் திரவ ஒட்சிசனுடன் இந்திய கடற்படைக்கு சொந்தமான ´சக்தி´ என்ற கப்பல் நேற்று பிற்பகல் கொழும்பு துறைமுகதை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.