நேற்று 120, 449 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று 120,  449 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக 12, 196 பேருக்கு செலுத்தப்பட்டுள்ள  அதேவேளை, இரண்டாவது தடவையாக 45, 184 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நேற்று முதலாவது தடவையாக 2, 602 பேருக்கும், இரண்டாவது தடவையாக 1218 பேருக்கும்  செலுத்தப்பட்டுள்ளது.

மொட்ர்னா தடுப்பூசி இரண்டாவது தடவையாக 57, 608 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1,579 பேருக்கு பைஸர் தடுப்பூசி இரண்டாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.