மெனிங் சந்தையில் 15 இலட்சம் கிலோ மரக்கறிகள் தேக்கம்

பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

சுமார் 15 லட்சம் கிலோகிராம் மரக்கறிகள் அங்கு சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.