செய்தியாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்

சட்டவிரோத மரக்கடத்தில் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றிருந்த நிலையில் முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையிலும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட தாங்கள் தயார் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான நாடாளுமனற் உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.