சுய முடக்கத்துக்கு தயாராகும் மேலும் சில நகரங்கள்

கொவிட்-19 பரவல் காரணமாக இன்றும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாத்தறை ஊருபொக்க நகரம் மற்றும் ஹிக்கடுவை நகரம் என்பன இவ்வாறு முடக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் ஹபராதுவ மற்றும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர முதலான நகரங்களை நாளை முதல் முடக்குவதற்கு வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் வாரியபொல நகரம் நாளை மறுதினம் முதல் முடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சங்கத்தினால், நகரங்களில் உள்ள தங்களது வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிலையங்கள் மூடப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.