கொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் திருத்தப்படும்

கொவிட் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் இறப்புகள் குறித்து தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட புள்ளி விவர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்திலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள சில மாவட்டங்களின் கொரோனா புள்ளி விவர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவற்றை முடிந்த வரை விரைவாக சரி செய்து சரியான புள்ளி விவர தரவுகளை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் விசேட வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்