ஒரே நாளில் 186 பேர் கொரோனாவுக்கு பலி!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 186 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 372,079 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 318,714ஆக அதிகரித்துள்ளது.