கொழும்பில் அடையாளம் காணப்படும் 90% மானோருக்கு டெல்டா

கொழும்பு நகரில் அடையாளம் காணப்படும் கொவிட்-19 தொற்றாளர்களில், 90 சதவீதமானோர் டெல்டா தொற்றாளர்கள் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சுமார் 7,000 தொற்றாளர்கள் தற்போது, வீடுகளில் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.