புதிய சுகாதார வழிகாட்டுதலில் திருத்தம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று பிற்பகல் வௌியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக வணிக வளாகங்கள் முழுமையாக மூடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இன்று   முதல் வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர் திறனில் 25 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.