கொரோனா தொற்றுறுதியான ஊடகவியலாளர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள்

கொரோனா தொற்றுறுதியான ஊடகவியலாளர் தொடர்பில் மேலும் ஆராய்ந்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை குறித்த ஊடகவியலாளர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சொந்த இடமான பாலாங்கொடை – கும்பகொடை பகுதியில் 6 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்தனர்.