மேலும் சில நகரங்களுக்கு பூட்டு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் பல நகரங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

அந்த வகையில் நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளை தொடக்கம் வருகின்ற 25ஆம் திகதி வரை முடக்கப்படவுள்ளன. அத்துடன் நாளை மறுதினம் தொடக்கம் சியம்பலாண்டுவ நகரமும் மூடப்படுகின்றது.

அதேபோல, நுவரெலியா – வெலிமட நகரமும் நாளை தொடக்கம் 26ஆம் திகதி வரை மூடப்படுகிறது.மேலும் காலி – கம்புறுப்பிட்டிய நகரமும் நாளை மறுதினம் தொடக்கம் 25ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹட்டன் – கொட்டகலை நகரமும் நாளை (19) தொடக்கம் 26ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் அதிகரித்துவருகின்ற கொரோனா அச்சம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.