கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கொவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார் .

மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காக கிராமிய மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர், நிபுணர்கள் குழு ஒன்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் இந்த கொவிட் நோயை காட்டுப்படுத்தும் விடயத்தில் சிறந்த பெறுபேறு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கிங் நெல்சன் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வளேபொட கருத்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே கொவிட் தொற்று பரவியது.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கருத்து தெரிவிக்கையில்,

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சுமார் 5,000 பேர் கொவிட் நோய்க்காக சுதேச வைத்திய சிகிச்சையை பெற்று வருகின்றனர்.

எவரும் உயிரிழக்கவில்லை. மேலும் 5 ஆயுர்வேத வைத்திய சாலைகள் விரைவில் கொவிட் சிகிச்சை வைத்திய சாலைகளாக மாற்றி அமைக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று பரவி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும், இடர் முகாமைத்துவ சட்டமூலத்தின் கீழ் தேசிய சபை அமைக்கப்படவில்லை. கொவிட் தொற்றை கட்டுப்படுத்திய அனைத்து நாடுகளும் நாட்டை மூடியே நிலைமையை சீர் செய்தன.

அரசாங்க தகவல் திணைக்களம்