சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2,157 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூனரின் காவல்துறையினருக்கு கிடைத்த தகவளுக்கமைய, முன்னெடுக்கப்பட் சோதனை நடவடிக்கையின்போது, பாரவூரத்தியொன்றிலிருந்து 1,157 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டது.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் சந்தேகத்திற்கிடமான பாரவூர்தியொன்றை பரிசோதித்தபோது, ​​1,000 கிலோகிராம் உலர் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த மஞ்சள் தொகை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.