கொழும்பு மாநகர மேயரின் அறிவிப்பு

அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டல்களை கடைபிடித்து செயற்படுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க மாநகர மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையில் நாடு தற்போது கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

தேவையான சேவைகளை இணையவழி (Online) மூலம் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

சில வியாபார நிலையங்களும் சிற்றுண்டி சாலைகளும் ஹோட்டல்களும் கடைகளும் வர்த்தக நிலையங்களும் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்படும் முறையை காணமுடிகின்றது குறிப்பாக இந்த இடங்களுக்குள் பிரவேசிக்கும்போது உடல் உஷ்ணம் பரிசோதிக்கப்படுவதையோ, தகவல்கள் திரட்டப் படுவதையோ காண முடிவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.