வரியை செலுத்தாத தரப்பினர்களுக்கு வழக்கு தொடரப்படும்

நீண்டகால குத்தகை அடிப்படையில்இ கிழக்கு மாகாணத்தில் கொள்வனவு செய்த காணிகளுக்காக செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத தரப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவி;த்துள்ளார்.

பல நிறுவனங்கள் வௌ;வேறு முறைமைகளில் அறிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாணத்தில் காணிகளை கொள்வனவு செய்துள்ளன.

எனினும்இ அந்தக் காணிகளில் எந்தவித அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதையும்இ அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் புறக்கணிப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.