மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் மதில் இடிந்து வீழ்ந்தததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்